அன்னூரில் காவல்துறை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணியை அன்னூர் காவல் நிலையம் முன்பு ஆய்வாளர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். பேரணியில் சென்றவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
பேரணி முடிவில் ஆய்வாளர் வெங்கடேசன் பேசியதாவது: தலைக்கவசம் அணிவதால் எதிர்பாராமல் விபத்து ஏற்படும்போது வாகனத்தில் செல்வோரின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் பொருளாளர் விஜயகுமார், மாரிச்சாமி, அன்னூர் மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் சிற்பி ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

நீங்கள் இடம்மாறி இருக்கிறீர்கள், அதற்காக துதி பாடத் தேவையில்லை! ஓபிஎஸ் vs செங்கோட்டையன்

தங்கம், வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம் (ஆக. 11)

முந்திரியில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலை! செந்துறை விவசாயிகள் எதிா்பாா்ப்பு!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


