பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

இஸ்திரி பெட்டிகளுக்கான 5 கிலோ எரிவாயு உருளை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியது

இஸ்திரி பெட்டிகளுக்கான 5 கிலோ எரிவாயு உருளையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனம் கோவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

இஸ்திரி பெட்டிகளுக்கான 5 கிலோ எரிவாயு உருளையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனம் கோவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
 நிறுவனத்தின் தமிழ்நாடு செயல் இயக்குநர் ஆர்.சித்தார்த்தன் இந்த உருளையை அறிமுகம் செய்துவைத்தார். 
இதில், தலைமைப் பொது மேலாளர் எல்.கே.எஸ்.செளஹான், கோவை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் வி.நாகராஜு, தென் மண்டல பொது மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்) சபீதா நடராஜ், கோவை கோட்ட  துணைப் பொது மேலாளர்  மனஷ் ரெளத்ராய், வர்த்தக மேலாளர் சிங்காரவேலன், முதுநிலைப் பகுதி மேலாளர் அலெக்சி ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இதைத் தொடர்ந்து செயல் இயக்குநர் ஆர்.சித்தார்த்தன், தலைமைப் பொது மேலாளர் எல்.கே.எஸ்.செளஹான் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐ.ஓ.சி.எல். சார்பில் மக்கள் பயன்பாடு, வணிகப்  பயன்பாடுகளுக்காக பல்வேறு எடைகளில் எரிவாயு உருளைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 வணிகப் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் அரிசி ஆலைகள், ஜவுளித் தொழில், கட்டுமானத் தொழில், அச்சுத் தொழில், கண்ணாடி, வாசனைத் திரவியம் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் எரிவாயு உருளைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது 5 கிலோ எடை கொண்ட உருளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 இது சென்னை, திருச்சி, சேலம், ஒசூர் போன்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
மேலும், இந்த 5 கிலோ உருளையுடன் இஸ்திரி பெட்டியை இணைத்துப் பயன்படுத்தும் முறையும் கோவையில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த 5 கிலோ உருளையின் விலை ரூ.400. இதனுடன் இணைக்கும் வகையிலான இஸ்திரி பெட்டியின் விலை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரமாகும். இந்தியன் ஆயில் கார்ப்பரஷேன் முகவர்கள் மூலம் இந்த வகையிலான உருளை, இஸ்திரிப் பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சூப்பர் மார்க்கெட்டுகள், சிறு வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவும் இவற்றை விற்க வழிவகை முடிவு செய்திருக்கிறோம்.
 மின்சாரம், நிலக்கரியால் இயக்கப்படும் இஸ்திரிப் பெட்டிகளால் ஆகும் செலவைக் காட்டிலும், எரிவாயு மூலம் இயக்கப்படும் இஸ்திரிப் பெட்டிகளுக்கான செலவு மிகவும் குறைவு. இந்த வகை இஸ்திரிப் பெட்டிகளைச் சூடேற்ற 2 நிமிடங்களே போதுமானது. இந்தப் பெட்டியின் எடை 6.50 கிலோ. இதை உபயோகிப்பதும் மிகவும் எளிதானது.
 மேலும், வாடிக்கையாளர்களின் உடைகளில் கறை ஏற்படுதல், நெருப்பு தெறித்து பாதிக்கப்படுதல் போன்ற பாதிப்புகள் இருக்காது. மின்சாரம் இல்லாத நேரத்திலும் இதை இயக்கலாம். சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்த வகை இஸ்திரிப் பெட்டிகள் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த வகை உருளைகளை மற்ற பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்றனர் அவர்கள்.
 முன்னதாக எரிவாயு மூலம் இஸ்திரி பெட்டியைப் பயன்படுத்துவது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், முகவர்கள், இஸ்திரி தொழிலாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.