பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் ரயில்கள்: ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சேலம் ரயில்வே கோட்ட உதவி வணிக மேலாளர் எம்.ஷாஜகான் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் ரயில் நிலைய அதிகாரி வேதநாயகம் முன்னிலை வகித்தார்.
ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் டி.சதீஷ்குமார், எம்.ஜெய்குமார், ஒய்.எம்.ஹபிபுல்லா, பி.ராஜ்குமார், ஜார்ஜ் குட்டி, ரயில்வே முதன்மை வணிக ஆய்வாளர் சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை செல்லும் பயணிகள் ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமையும் தொடர வேண்டும். இந்த ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகளை இணைக்க வேண்டும்.
 மேட்டுப்பாளையம் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சிவம் தியேட்டர் எதிர்ப்புறம் உள்ள ரயில்வே கேட்டை கூடுதலாக 2 மணி நேரம் திறந்து வைக்க வேண்டும். பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல ரயிலில் பயணிப்பதாலும், அங்கிருந்து கோவைக்கு 100-க்கும் மேற்பட்டோர் செல்வதாலும், காலை நேரத்தில் அங்கு ரயில்கள் நின்று செல்லும் நேரத்தை ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடமாக அதிகரிக்க வேண்டும்.
அதேபோல, பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேட்டுப்பாளையம் ரயில் நிலைய நுழைவாயிலை சீரமைத்து, போதிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள ஆட்டோ நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்திப் பேசினர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக கோட்ட மேலாளரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.