தென் மாவட்டங்களிலும் கைவரிசை காட்டிய ஏடிஎம் கொள்ளையர்கள்: விசாரணையில் தகவல்
போலி ஏடிஎம் அட்டை தயாரித்து கோவை ஏடிஎம் மையத்தில் லட்சக்கணக்கான ரூபாயைத் திருடிய வழக்கில் கைதான 6 பேரையும் காவலில்


போலி ஏடிஎம் அட்டை தயாரித்து கோவை ஏடிஎம் மையத்தில் லட்சக்கணக்கான ரூபாயைத் திருடிய வழக்கில் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், அவர்கள் தென் மாவட்டங்களிலும் ஸ்கிம்மர் பொருத்தி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
கோவை, சிங்காநல்லூர், காமராஜர் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ஜூன் 2-ஆம் தேதி பணம் எடுத்த 20 நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ. 12 லட்சம் திருடப்பட்டது.
இதுகுறித்து தனியார் வங்கி மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து 6 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளியைச் சேர்ந்த பி.தமிழரசன் (26), ஜி.வாசிம் (30), சென்னையைச் சேர்ந்த எஸ்.நிரஞ்சன் (38), இலங்கை அகதியும், சென்னையில் வசித்து வருபவருமான டி. லவசாந்தன் (29), திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தென்றல் நகரைச் சேர்ந்த எஸ்.கிஷோக் (25), திருப்பூர், அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.மனோகரன்(19) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து போலி ஏடிஎம் அட்டைகள், செல்லிடப்பேசி, மடிக்கணினி, 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், கைதான 6 பேரையும் கடந்த ஜூலை 2 முதல் 7-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், ஏடிஎம் கும்பல் தென் மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் நாமக்கல்ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது. மேலும், லவசாந்தன் மனைவி பெயரில் வங்கியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் முடக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...