நீராதாரங்களைக் காக்க அரசு முன்வர வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
இக்கட்சியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:
சாயக்கழிவு, தோல் கழிவு, நகராட்சி, மாநகராட்சிகளின் கழிவுகள் கலப்பதால் கொங்கு மண்டலத்தில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தடுக்க, நீர்நிலைகளை அரசு சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்க வேண்டும்.
வன்கொடுமை சட்டத்தில் விசாரிக்காமல் கைது செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்திருப்பது சரியல்ல.
வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை சார்பில், பொள்ளாச்சியில் "பண்பாடு போற்றுவோம்' என்ற கலாசார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் வரவேற்க தக்கது. ஆயினும் இது தொடர்பாக நிலத்தை இழக்கும் மக்களுக்கு இரட்டிப்பு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

