பிஏபி அணைகளின் உபரிநீரால் கோதவாடி குளம் நிரப்பப்படும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன்
பிஏபி அணைகளின் உபரிநீரைக் கொண்டு கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடி குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.


பிஏபி அணைகளின் உபரிநீரைக் கொண்டு கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடி குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடியில் உள்ள கோதவாடி குளம் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் குளத்தின் வாயிலாக பல நூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 11.07 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்தக் குளம் தூர்வாரப்படாமல் இருந்ததால், சட்டப்பேரவை துணைத் தலைவரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று கடந்த செவ்வாய்க்கிழமை குளத்தில் தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோதவாடி குளம் தூர்வாரும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். இந்தக் குளம் தூர்வாரப்படுவதன் மூலமாக, பருவமழைக் காலங்களில் மழைநீர்
இதில் சேமிக்கப்படும். குளம் முழுமையாக நிரம்பினால் ஓர் ஆண்டுக்கு தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், "250 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதவாடி குளத்துக்கு பிஏபி அணைகள் நிரம்பிய பிறகு உபரிநீரைக் கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இந்த ஆய்வின்போது, உடன் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் முத்துசாமி உள்பட பலர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...