நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம்: தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் நிர்வாகத்தினர் தொழில்வரி பிடித்தம் செய்வதற்கு தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:49 am

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் நிர்வாகத்தினர் தொழில்வரி பிடித்தம் செய்வதற்கு தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சுமார் 30,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தினர் தங்கள் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.  
அண்மைக்காலமாக நகராட்சிக்கு தொழில்வரி செலுத்த வேண்டும் என்று கூறி ஆண்டுக்கு ரூ. 600 வரை தொழிலாளர்களின் சம்பளத்தில் நிர்வாகத்தினர் பிடித்தம் செய்து வருகின்றனர்.  இதற்கு தொழிலாளர்கல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தொழிலாளர்களுக்குரிய தொழில்வரியை நிர்வாகத்தினரே செலுத்த முன்வர வேண்டும் என்று தோட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுக்க இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.