வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பிஏபி அணைகளின் உபரிநீரால் கோதவாடி குளம் நிரப்பப்படும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

பிஏபி அணைகளின் உபரிநீரைக் கொண்டு கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடி குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.

Updated On :9 ஜூலை 2018, 1:50 am

பிஏபி அணைகளின் உபரிநீரைக் கொண்டு கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடி குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடியில் உள்ள கோதவாடி குளம் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் குளத்தின் வாயிலாக பல நூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 11.07 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்தக் குளம் தூர்வாரப்படாமல் இருந்ததால், சட்டப்பேரவை துணைத் தலைவரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று கடந்த செவ்வாய்க்கிழமை குளத்தில் தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோதவாடி குளம் தூர்வாரும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். இந்தக் குளம் தூர்வாரப்படுவதன் மூலமாக,  பருவமழைக் காலங்களில் மழைநீர் 
இதில் சேமிக்கப்படும். குளம் முழுமையாக நிரம்பினால் ஓர் ஆண்டுக்கு தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், "250 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதவாடி குளத்துக்கு பிஏபி அணைகள் நிரம்பிய பிறகு உபரிநீரைக் கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.  இந்த ஆய்வின்போது, உடன் சட்டப்பேரவை  முன்னாள்  உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி,  பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் முத்துசாமி உள்பட பலர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.