கோவை சிறையில் கைதிகள் சித்ரவதை: நீதிபதியிடம் வழக்குரைஞர்கள் புகார் மனு

கோவை மத்திய சிறையில் கைதிகள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுவதாகவும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் மாவட்ட நீதிபதியிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்துள்ளனர்.
Updated on
1 min read

கோவை மத்திய சிறையில் கைதிகள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுவதாகவும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் மாவட்ட நீதிபதியிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்குரைஞர்கள் சங்க செயலர் சுதீஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள்  மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம்.கிறிஸ்டோபரிடம் அளித்த மனு விவரம்:
குற்ற வழக்குகளில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்படும் சிறைவாசிகள் சிறைத் துறை நிர்வாகத்தால் கேமரா இல்லாத பகுதிகளில் வைத்துத் தாக்கப்படுகின்றனர். சிறைவாசியின் தனி விவரம் சேகரிக்கப்படும் இடத்திலும், அந்தந்த கைதிகளுக்கான பிளாக், மேல் பிளாக்கின் உள்ளேயும் தடிகள், பிவிசி பைப்புகளால் கைதிகள் சட்ட விரோதமாக தாக்கப்படுகின்றனர்.  
சிறைவாசிகளை வேகம் குறையாமல் 500 தோப்புக்கரணம் போடச்சொல்லுதல்,  நீண்ட நேரம் முட்டிபோட வைத்தல், அவர்களின் விருப்பத்துக்கு மாறாக மொட்டையடித்தல், நீண்ட நேரம் நிர்வாணப்படுத்தி நிற்கவைத்தல்,  சிறைவாசிகளின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளில் திட்டுதல் போன்ற செயல்களில் சிறைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி சிறையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் மாவட்ட நீதிபதிக்கு உள்ளது. ஆகவே, சிறைவாசிகள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதுடன், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com