பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிர்வாக அலுவலர் பத்மலோசணி முன்னிலை வகித்தார். முதல்வர் எஸ்.மகேந்திரன் வரவேற்றார். கல்லூரி வேலைவாய்ப்புப் பிரிவு அலுவலர் எஸ்.சுபாஷிணி அறிக்கை சமர்ப்பித்தார். மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சுமார் 326 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினார்.
இக்கல்லூரியில் நடந்த வளாகத் தேர்வில் மைக்ரோ சாப்ட், கூகுள் நிறுவனங்களில் பணிவாய்ப்பு பெற்ற இக்கல்லூரியைச் சேர்ந்த ஏ.ஸ்டீபன்ராஜ், கலைவாணி(அரசுப் பள்ளியில் படித்தவர்கள்) ஆகியோர் ஏற்புரையாற்றினர். தொடர்ந்து கல்லூரி நிகழ்வுகளிலும், வளாக வேலைவாய்ப்பு முகாம்களிலும் பங்கெடுத்து தங்கள் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. உதவிப் பேராசிரியை ரஹமத்தூர் ரூபியா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 பேர் பலி!

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

