சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் திருட்டு

துடியலூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On :29 மார்ச் 2018, 2:59 am

துடியலூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இங்குள்ள நேதாஜி நகரில் வசிப்பவர் எம்.கணேசன். பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,  அவர் சாமநாயக்கன்பாளையத்திலுள்ள தனது தாயார் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றிருந்தார்.  பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகைகள், ரூ. 7 ஆயிரம் ரொக்கம்  ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெ.நா.பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.