உணவக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து: மேலும் ஒரு பெண் சாவு
அவிநாசியில் உணவக முன்பகுதி கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.


அவிநாசியில் உணவக முன்பகுதி கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசியில் உள்ள உணவகத்தின் முன்புறமுள்ள கான்கிரீட் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை சரிந்து விழுந்தது. இதில் அங்கு உணவு வாங்குவதற்காக வந்திருந்த அவிநாசியை அடுத்த நியூ திருப்பூரில் உள்ள பனியன் நிறுவன விடுதியில் தங்கி பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த துள்சிநாத் புர்டி மகள் சரஸ்வதி புர்டி (23) இடர்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே மாநிலத்தை சேர்ந்த சுனிதா (25), விழுப்புரம் மாவட்டம், கொடியூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ரம்யா (19), விழுப்புரம், இருவல்பட்டு ஆற்றுத் தெருவைச் சேர்ந்த சரவணன் மகள் பிரியா (20) ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இவர்கள், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ரம்யா திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நிவாரணம் கோரி போராட்டம்
உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கும், சிகிச்சையில் உள்ள பெண்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரியும், விபத்துக்கு காரணமான உணவக உரிமையாளர் மீதும், பனியன் நிறுவன உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவிநாசி தலித் விடுதலைக் கட்சியினர் நியூ திருப்பூர் நுழைவாயில் முன் திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் ரம்யா உறவினர்கள் தர்னா
விபத்தில் சிக்கி உயிரிழந்த ரம்யாவை காண வந்த அவரது உறவினர்கள், அவரது குடும்பத்துக்கு பனியன் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் எனக்கோரி தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...