/

பஞ்சாலைகளில் தொழிலாளர்களுக்கு போனஸ் உடன்பாடு

தீபாவளியையொட்டி ஐ.என்.டி.யூ.சி. சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பஞ்சாலைகளில் தொழிலாளர்களுக்கு போனஸ் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Updated On :5 நவம்பர் 2018, 7:39 am IST

தீபாவளியையொட்டி ஐ.என்.டி.யூ.சி. சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பஞ்சாலைகளில் தொழிலாளர்களுக்கு போனஸ் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (ஐஎன்டியூசி) பொதுச் செயலாளர் கோவை செல்வன், பேப்பர் மில்ஸ் தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாலர் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 பஞ்சாலைகளில் 2017-18 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது தொடர்பாக ஐ.என்.டி.யூ.சி. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் கோவில்பட்டி லட்சுமி மில்ஸ், சூலூர் விஷ்ணு லட்சுமி மில்ஸ் ஆகியவற்றில் 10 சதவீதமும், மருதமலை ஸ்ரீவேல்முருகன், பிரதிஷ்டா மில்ஸ் ஆகியவற்றில் 15.5 சதவீதமும், டிபிகி காட்டன் மில்லில் 18 சதவீமும், ஸ்ரீகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸில் 17 சதவீதமும், கோமுகி ஸ்பின்னிங் மில்ஸில் 9.50 சதவீமும், எல்லன் டெக்ஸ்டைல்ஸில் 9.60 சதவீமும், பி.எம்.சி. டெக்ஸ்டைல்ஸில் 11 சதவீமும், ஜிடிஎன் டெக்ஸ்டைல்ஸில் 12 சதவீமும், ஸ்ரீகண்ணபிரான் மில், எஸ்.வி.டி. ஸ்பின்னிங் மில், வி.ஜே.சின்டெக்ஸ், சதர்ன் டெக்ஸ்டைல்ஸ், என்.டி.சி. பஞ்சாலைகளான பங்கஜா மில், கம்போடியா, சிஎஸ் அண்ட் டபிள்யூ, ரங்கவிலாஸ் மில், முருகன் மில், காளீஸ்வரர் மில் உள்ளிட்டவற்றில் 8.33 சதவீதம் போனஸ் வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
 இதே போல ஜி.வி.ஜி. பேப்பர் மில், ஹரிகிருஷ்ணா பேப்பர் மில்லில் 26 சதவீதம் மற்றும் கூடுதல் தொகையாக ரூ.ஆயிரமாக வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு பஞ்சாலை மற்றும் பேப்பர் மில்களில் ஐ.என்.டி.யூ.சி. சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தொழிலாளர்களுக்கான போனஸ் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.