கோவையில் நடைபெற உள்ள இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் தேசிய மாநாட்டையொட்டி மாநாட்டின் இலச்சினை வெளியிடப்பட்டது.
இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் 22 ஆவது தேசிய மாநாடு கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 22,23,24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 700 பிரதிநிதிகளும், 15 நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்கின்றனர். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் மாநாட்டை துவக்கி வைக்கவுள்ளார்.
மாநாட்டில் தா.பாண்டியன், நடிகர் ராஜேஷ், இரா.முத்தரசன், ஆர்.எஸ்.பாரதி, பழ நெடுமாறன், திருநாவுக்கரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள வரவேற்புக் குழுவுக்கு இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன் தலைவராகவும், இஸ்கப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்பின் மாநிலக் குழுக் கூட்டம் இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில், முன்னாள் மாவட்ட துணை ஆட்சியர் வி.சுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாநாட்டு நிகழ்வு திட்டங்கள் குறித்து பொதுச்செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
இதில் மாநாட்டு இலச்சினை வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில், ப.பா.ரமணி, எம்.வி.ராஜன்,.எஸ்.கோட்டியப்பன், சு.பழனிசாமி, சேலம் டி.வி.கருணைதாஸ், சுதந்திரம், திண்டுக்கல் சந்தோஷ் , பேராசிரியர்கள் திலீப்குமார், செல்வி, பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் ஹாஜி ஜெ.முகமது ரஃபிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


