6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ. 1.66 கோடி மோசடிதலைமறைவாக இருந்த ஈமு கோழிப் பண்ணை உரிமையாளர் கைது

ரூ. 1.66 கோடி மோசடி வழக்கில் கடந்த ஓர் ஆண்டாகத் தலைமறைவாக இருந்த ஈமு கோழிப் பண்ணை உரிமையாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:15 pm

DIN


ரூ. 1.66 கோடி மோசடி வழக்கில் கடந்த ஓர் ஆண்டாகத் தலைமறைவாக இருந்த ஈமு கோழிப் பண்ணை உரிமையாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோவை, பொள்ளாச்சி சாலை, கிணத்துக்கடவு அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், பத்மநாபன், ராஜேஷ்வரன் ஆகியோர் சேர்ந்து அதே பகுதியில் ஈமு கோழிப் பண்ணை நடத்தி வந்தனர்.
அவர்கள், ஈமு கோழி வளர்ப்பில் அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வட்டி கொடுக்காமல் ரூ. 1.66 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் ஈமு கோழிப் பண்ணை உரிமையாளர்களான ஜெயகுமார், பத்மநாபன், ராஜேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் மூன்று பேரும் ஜாமீனில் வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெயகுமார் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்ய டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், பொருளாதார குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஓர் ஆண்டாகத் தலைமறைவாக இருந்த ஜெயகுமாரை திங்கள்கிழமை கைது செய்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.