மேட்டுப்பாளையம் அருகே, நடூர் கிராம கருப்பராயன் குட்டையைத் தன்னார்வ அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே நடூர் கிராம கருப்பராயன் குட்டைப் பகுதி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.
இக்கிராமம் மேட்டுப்பாளையம் நகராட்சி, சிக்கதாசம்பாளையம் ஊராட்சிப் பகுதிகளுக்கு இடையே உள்ளது. அதனால் இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இரு நிர்வாகத்துக்கும் இடையே அடிக்கடி குழப்பம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இங்கு சுகாதாரப் பணிகள் கூட மேற்கொள்ள முடியாததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 மாதத்துக்கு முன்னர் பெய்த மழையால் கருப்பராயன் குட்டை கழிவுநீர்க் கால்வாயில் அடித்து வரப்பட்ட கழிவுகள் சாலையின் தரைப் பாலத்தைச் சூழ்ந்தன. இதனால் அப்பகுதி மக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தரைப்பாலம் கழிவுநீரால் சூழப்பட்டதால் இக்கிராம மக்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள தீயணைப்பு நிலையம் வழியாகச் சென்று அன்னூர் சாலையை அடைந்து அதன்பின் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தத் தரைப் பாலத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம், நமது மேட்டுப்பாளையம் குழுவினர், ரோட்டரி கிளப் மற்றும் பல தன்னார்வ அமைப்பினர் இணைந்து கருப்பராயன் குட்டையைச் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இப்பணியை நகராட்சி இணை ஆணையர் காந்திராஜன் தலைமை வகித்து தொடக்கிவைத்தார். அவர்களுடன் சுற்று வட்டார கிராம மக்களும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!

மே மாதப் பலன்கள் - மீனம்

நடிகர் அஜித்துக்கு இபிஎஸ், அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து

மே மாதப் பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

