நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலையை  விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது வழக்கு

அன்னூர் அருகே எல்லப்பாளையத்தில் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:38 am IST

அன்னூர் அருகே எல்லப்பாளையத்தில் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம், மாரியம்மன் கோயில்  வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் (50). இவர் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலை ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்து வருவதாக திருப்பூர் கைத்தறி அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.  இதையடுத்து உதவி இயக்குநர் அம்சவேணி தலைமையிலான அதிகாரிகள் எல்லப்பாளையம் சண்முகம் விசைத்தறிக் கூடத்தில் சோதனை செய்தனர்.  அப்போது அங்கு கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சேலை ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து  உதவி அமலாக்கத் துறை அலுவலர் அம்சவேணி அளித்த புகாரின்பேரில், சண்முகம் மீது அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.