அன்னூர் அருகே எல்லப்பாளையத்தில் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் (50). இவர் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலை ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்து வருவதாக திருப்பூர் கைத்தறி அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உதவி இயக்குநர் அம்சவேணி தலைமையிலான அதிகாரிகள் எல்லப்பாளையம் சண்முகம் விசைத்தறிக் கூடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சேலை ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உதவி அமலாக்கத் துறை அலுவலர் அம்சவேணி அளித்த புகாரின்பேரில், சண்முகம் மீது அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


