கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் தந்தை, மகன் உள்பட 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகவின் (24). இவர், காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களாக மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்த செல்வகவின் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து, உறவினர் ஒருவரின் அறிவுரைப்படி செல்வகவின், அவரது தந்தை சுப்பிரமணி (56), மாமனார் கந்தசாமி (52) ஆகியோர் கேரள மாநிலம் பாலக்காட்டில் மூல நோய்க்கு சிகிச்சை பெற ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிவகிரியில் இருந்து பாலக்காடுக்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
காரை மாமனார் கந்தசாமி ஓட்டி வந்துள்ளார். சிகிச்சை முடிந்து மூவரும் சொந்த ஊருக்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது, பொள்ளாச்சி - பாலக்காடு நெடுஞ்சாலையில் கருமாபுரம் பாலத்தின் மீது கார் வந்த போது, அரியலூரில் இருந்து பாலக்காட்டுக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, காரின் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி, பாலத்தின் தடுப்புச் சுவற்றை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சுப்பிரமணியன், கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பலத்த காயமடைந்த செல்வகவினை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வகவின் உயிரிழந்தார். பள்ளத்தில் கவிழ்ந்த காரை கிரேன் மூலம் மீட்ட போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காருக்குள் சிக்கிய கந்தசாமியின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்கபாண்டியன் வழக்குப் பதிவு செய்து கேரள மாநிலம், கோழிகோட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் உண்ணிகண்ணன் (50) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோசடி குற்றச்சாட்டு: கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா் கைது
பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
