கோவையில் பார்சல் நிறுவன ஊழியரைத் தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சுடுகாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ தங்க நகைகளைப் போலீஸார் மீட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாங்கோ சிங். இவரது மகன் பிரதீவ் சிங். இவர் கோவை மரக்கடை அருகே மில் சாலையில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிறுவனம் கோவையில் உள்ள தங்க நகைப் பட்டறை, நகை வியாபாரிகளிடம் இருந்து நகைகளைச் சேகரித்து வெளி மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வந்தது.
இந்நிலையில், 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மும்பை செல்லும் விமானத்தில் அனுப்பி வைப்பதற்காக பிப்ரவரி 7 ஆம் தேதி அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் பிரதீவ் சிங் சென்று கொண்டிருந்தார். அப்போது, பீளமேடு அருகே சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பிரதீவ் சிங்கை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், தனியார் பார்சல் நிறுவன பெண் ஊழியர் பிரவீணா, அவரது கணவர் உள்பட 5 பேரை கோவை மாநகர போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரவீணாவின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகளை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தனது கூட்டாளிகளிடம் கொடுத்து தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சுமார் 1 கிலோ தங்க நகைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த நகைகளைப் போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சிறிய அளவிலான வைர நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
விரைவில் மொத்த நகைகளும் மீட்கப்படும் என்று காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


