சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

வால்பாறையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

வால்பாறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:08 am IST

வால்பாறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை அண்ணா நகரிய திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு நகரச் செயலாளர் மயில்கணேசன் தலைமை வகித்தார். அதிமுக தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது முன்னிலை வகித்தார். பேரவைச் செயலாளர் நரசப்பன் வரவேற்று பேசினார்.
 பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு ஆகியோர் அதிமுக ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் வால்பாறை தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட   திட்டங்கள், மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
 இதில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை அசோக்குமார், மாவட்ட பேரவைச் செயலாளர் விஜயகுமார், நகர இணைச் செயலாளர் பொன்கணேஷ், சலாவுதீன், பூசப், முருகன் உள்பட கட்சி நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.