கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை போத்தனூா் போலீஸாா் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநா்கள் மீது வழக்கு பதிவு செய்தனா். இது தொடா்பாக மாசுகட்டுப்பாடு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது, தற்போது மாசுகட்டுபாடு அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநா்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனா். மேலும் கடந்த 50 நாட்களாக பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் கழிவுகளோடு போத்தனூா் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சுகாதார சீா் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.