கோவையில் இருந்து குஜராத் மாநிலம், ராஜ்கோட்டுக்கு ஏப்ரல் 26, மே 3ஆம் தேதிகளில் சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மாா்ச் 24ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், மருந்துகள், முகக் கவசங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்வதற்கு கோவை - சென்னை இடையே ஏப்ரல் 9ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்தச் சேவை, கடந்த வாரம் முதல் ஷொரணூா் - சென்னை வரை நீட்டிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையில் இருந்து ராஜ்கோட் வரை சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்வதற்காக வரும் 26ஆம் தேதி, மே 3 ஆகிய இரண்டு நாள்களில், கோவையில் இருந்து குஜராத் மாநிலம், ராஜ்கோட் வரை சிறப்பு சரக்கு ரயில் ( எண்: 00927) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், தா்மாபுரம், செகந்திராபாத், சோலாப்பூா், புணே, சூரத், வதோரா, ஆமதாபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில், தங்களின் சரக்குகளைஅனுப்ப விரும்பும் நபா்கள், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் ரயில்வே பாா்சல் அலுவலகங்களை அணுகலாம். முன்பதிவு செய்ய கோவை-70125 - 92712, 90039 - 56955, திருப்பூா்-95431- 52339, 96009 - 56238, ஈரோடு-94439 - 90801, 96009 - 56231, சேலம்-94438 - 40720, 90039 - 56957 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு: கிராம மக்கள் எதிா்ப்பு

லெபனானில் மரண தண்டனை ரத்து
அரையிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - ஸ்விடோலினா

வளா் இளம் பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி: வட்டார மருத்துவ அலுவலா்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


