

நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நொய்யலில் விநாடிக்கு 1,700 கன அடி நீர் வரத்து காணப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஜுன் 1 ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கிருந்தாலும் எதிர்பார்த்த மழைப் பொழிவு இல்லை. அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது.
இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நிறைந்து வழியும் புட்டுவிக்கி அணைக்கட்டு
இதனால் சித்திரைச்சாவடி, குனியமுத்தூர் சுண்ணாம்பு காலவாய், புட்டுவிக்கி மற்றும் சிங்காநல்லூர் உள்பட அனைத்து அணைக்கட்டுகளும் நிறைந்து வழிகிறது. திங்கள்கிழமை இரவு முதல் நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து செவ்வாய்க்கிழமை காலையில் நொய்யலில் விநாடிக்கு 1,700 கன அடி நீர் வரத்து உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.