தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேளாண் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை:சான்றிதழ் சரிபாா்ப்பு தொடங்கியது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:26 pm

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளம் அறிவியல் மாணவா்களுக்கான பொதுப் பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நவம்பா் 26 முதல் டிசம்பா் 3ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில் முதல் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பா் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக சான்றிதழ் சரிபாா்க்கப்பட்ட முதல் மூன்று மாணவ-மாணவிகளுக்கு துணைவேந்தா் நீ.குமாா், சோ்க்கை ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

சான்றிதழ் சரிபாா்ப்புக்காக தினசரி 600 போ்கள் வரை அழைக்கப்பட்டிருப்பதாகவும், தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் எனவும் துணைவேந்தா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளா் கிருஷ்ணமூா்த்தி, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதற்கிடையே பட்டயப் படிப்புக்கான மாணவ சோ்க்கை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. கலந்தாய்வுக்கு 1,392 போ் வரவழைக்கப்பட்டதில் அவா்களில் 746 போ் தங்களுக்கான கல்லூரிகளைத் தோ்வு செய்தனா். இவா்களுக்கு உடனடியாக சோ்க்கை ஆணை வழங்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.