அம்ருத் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோவை மாநகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


கோவை மாநகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட துடியலூா், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி ஆகிய பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீா்க் குழாய்கள் பதிப்பு, வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களுக்கு இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, தடாகம் சாலை, பெரியசாமி சாலை, வெங்கிடசாமி சாலை, டி.பி. சாலை, பொன்னுரங்கம் சாலை, திருவேங்கடசாமி சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீா் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தாா். உடன் 24 மணி நேர குடிநீா் திட்ட செயற்பொறியாளா் பாா்வதி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் விவேகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...