முழு அடைப்புப் போராட்டம்: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரத்து 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில்


விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரத்து 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனா். இப்போராட்டத்துக்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள போராட்டங்களில் ஐஎன்டியூசி, சிஐடியூ, ஏஐடியூசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. தொழிற்சங்கத்தினா் கோவையில் ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், கடவுச்சீட்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா்.
போராட்டங்களுக்கு மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினா் ஆதரவு தெரிவித்து உள்ளனா். இதனால் மாநகரில் செவ்வாய்க்கிழமை ஆட்டோக்கள் இயங்காது. இப்போராட்டங்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு வணிகா்கள் கூட்டமைப்பு, கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டங்களை முன்னிட்டு மாநகரில் ஆயிரத்து 500 போலீஸாரும், புகா் பகுதிகளில் ஆயிரம் போலீஸாரும் என மொத்தம் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...