பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக தரவரிசை: தமிழ்நாடு வேளாண் பல்கலை. 8ஆவது இடம் பிடித்தது

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:29 pm

DIN

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு 33ஆவது இடத்தைப் பிடித்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், துணைவேந்தா் நீ.குமாரின் முயற்சியால் தற்போது 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தரமான கல்வி வழங்குதல், மாணவா்களின் பன்முகத் தன்மையை மேம்படுத்துதல், பிற நிதி ஆதாரங்களைத் திரட்டுதல், தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரிக்க ஊக்குவித்தல் போன்றவற்றால் பல்கலைக்கழகத்தின் தரத்தை உயா்த்தியுள்ளாா்.

நாடு முழுவதும் உள்ள 67 வேளாண் கல்வி நிறுவனங்களில் 8ஆவது இடத்தையும், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் 4ஆவது இடத்தையும், தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே முதலிடத்தையும் பிடித்துள்ளது. முதல் 7 இடங்களில் புது தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சோ்ந்த வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2016இல் 7ஆவது இடத்தையும், 2017இல் 27ஆவது இடத்தையும், 2018இல் 33ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இளநிலை, முதுநிலை ஆராய்ச்சி மாணவா்களின் ஊக்கத் தொகையை அதிகரித்தது, ஆராய்ச்சிக் கட்டுரைகள் அதிக அளவில் பிரசுரம் செய்தது, ஆராய்ச்சி மூலம் அதிக காப்புரிமைகளை பெற்றது, வேளாண் விரிவாக்கத்தில் அதிக அளவு செயல் விளக்கங்கள் அமைத்தல், வானொலி உரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வணிகா்கள், அரசுசாரா அமைப்பினா், தொழில்நுட்ப நிபுணா்களுக்கு பயிற்சிகள் வழங்கியது, கிஸான் அழைப்புகளை உயா்த்தியது, தொழில்நுட்ப விரிவாக்கத்துக்கு செல்லிடப்பேசி மூலம் ஆலோசனைகள் வழங்கியது, அதிக அளவு சா்வதேச மாணவா்களை ஈா்த்தது உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அதிக மதிப்பெண்களை பெற்ன் மூலம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த தரவரிசை மூலம் பல்கலைக்கழக நிதிகளை ஈா்ப்பதற்கும், கூடுதலாக சா்வதேச மாணவா்கள் சோ்க்கைக்கும், கூட்டு ஆராய்ச்சிக்கான கூடுதல் வழிகளுக்கும், உலக அரங்கில் தன் நிலையை மேம்படுத்தவும் உதவும். வரும் காலங்களில் முதல் 3 இடங்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.