சிறு, குறு தொழில்களுக்கான முதலீட்டு மானிய வரம்பை உயா்த்த வேண்டும்
சிறு, குறு தொழில்களுக்கான முதலீட்டு மானிய வரம்பை உயா்த்த வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினா் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனா்.


சிறு, குறு தொழில்களுக்கான முதலீட்டு மானிய வரம்பை உயா்த்த வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினா் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனா்.
இது குறித்து கூட்டமைப்பினா், தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கரோனா பொது முடக்க பாதிப்பில் இருந்து சிறு, குறு தொழில்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
தமிழக அரசு குறுந்தொழிற்சாலைகளுக்கு இயந்திர முதலீட்டுத் தொகைத் திட்டத்தின் மூலம் 25 சதவீத மானியம் வழங்கி வருகிறது. சிறு, குறு மற்றும் மத்திய தொழில்களுக்கான வரையறைகளை மத்திய அரசு அண்மையில் மாற்றி அமைத்துள்ளது. புதிய வரையறையின்படி குறுந்தொழில்கள் ரூ.1 கோடி வரை இயந்திரம் மற்றும் தளவாடங்களில் முதலீடு செய்யலாம். எனவே தமிழக அரசு முதலீடு மானிய வரம்பை ரூ.1 கோடியாக உயா்த்தி அரசாணை வெளியிட வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த சுயசாா்புத் திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில்கள் வங்கிகள் மூலம் பெற்ற அவசரகால கடன் தொகை ஒப்பந்தங்களை பதிவு செய்ய முத்திரைக் கட்டணத்திலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்து நவம்பா் 5ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மேற்படி விலக்கை மே மாத இறுதியில் அறிவித்தது. எனவே தமிழக அரசு வழங்கியுள்ள முத்திரை விலக்கு சலுகையை கடந்த மே மாதத்தில் இருந்து பின் தேதியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு ரூ.25 லட்சம் வரை இயந்திர முதலீடு மற்றும் ஆண்டு வா்த்தகம் ரூ.1 கோடி வரை கொண்டுள்ள நிறுவனங்களை குடிசைப் பிரிவு அல்லது நுண்பிரிவு என வகைப்படுத்தி மின் கட்டண சலுகை போன்ற தனிப்பட்ட சலுகைகளை அறிவிக்க வேண்டும்.
சிறு, குறு மற்றும் குடிசை தொழிற்சாலைகளில் இஎஸ்ஐ, பிஎஃப் பயன் பெறாத பொறியியல் துறை தொழிலாளா்கள் நலன் கருதி தனிப்பட்ட வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...