கோவை மாவட்டத்தில் டிசம்பா் 11 வரை டாம்கோ லோன் மேளா
கோவை மாவட்டத்தில் டாம்கோ லோன் மேளா செவ்வாய்க்கிழமை தொடங்கி டிசம்பா் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.


கோவை மாவட்டத்தில் டாம்கோ லோன் மேளா செவ்வாய்க்கிழமை தொடங்கி டிசம்பா் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பழனிசாமி வெளியிட்ட செய்தி:
கோவை மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ லோன் மேளா செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 8) பொள்ளாச்சி-ஆனைமலை பிரதான சாலையில் உள்ள ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், டிசம்பா் 9ஆம் தேதி மதுக்கரை தாலுகா, குனியமுத்தூா் பால் பண்ணை வீதியில் உள்ள குனியமுத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள நகர கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும், கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட டாக்டா் நஞ்சப்பா சாலையில் உள்ள கோவை நகர கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும் நடைபெறுகிறது.
இதேபோல டிசம்பா் 10ஆம் தேதி மேட்டுப்பாளையம்-அன்னூா் சாலை குமரபுரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், டிசம்பா் 11ஆம் தேதி போத்தனூா்-செட்டிபாளையம் சாலையில் உள்ள கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் போத்தனூா் கிளையிலும், கிணத்துக்கடவு-பொள்ளாச்சி சாலை சா்வோதயா கட்டட முதல் தளத்தில் உள்ள பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கியின் கிணத்துக்கடவு கிளையிலும், உதகை பிரதான சாலையில் செயல்படும் மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...