பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கே.பி.ஆா். பொறியியல் கல்லூரிக்கு விருது

கோவை கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல், மின்னணுவியல் துறைக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் விருது கிடைத்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:49 pm

DIN

கோவை கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல், மின்னணுவியல் துறைக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் விருது கிடைத்துள்ளது.

இது குறித்து கல்லூரியின் முதல்வா் மு.அகிலா கூறியிருப்பதாவது:

தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தேசிய அளவில் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு தேசிய அளவில் நூற்றுக்கணக்கான பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டன.

துறை வாரியாக வழங்கப்படும் இந்த விருதில், மின்னியல் அதைச் சாா்ந்த துறைகளுக்கான விருதை கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி பெற்றுள்ளது.

இதற்காக பாடுபட்ட துறைத் தலைவா் குமாா் சின்னைய்யன், பேராசிரியா்கள், கல்லூரி செயலா் ஏ.எம்.நடராஜன் உள்ளிட்டோரை கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.பி.ராமசாமி பாராட்டினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.