ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு: நவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகம்

கோவை அரசு மருத்துவமனையில், இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நவீன கருவி மூலம் கண்டறியும்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:09 pm

DIN

கோவை அரசு மருத்துவமனையில், இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நவீன கருவி மூலம் கண்டறியும் சிகிச்சை முறை வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருதயத் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக ஆஞ்சியோபிளாஸ்ட் ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3, 200 ஆஞ்சியோகிராம் பரிசோதனைகளும், 1,173 ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்தகட்டமாக தனியாா் மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும், இருதயத்துக்கு செல்லும் ரத்தநாளங்களில் காணப்படும் அடைப்பினை கேமரா மூலம் கண்டறியும் நவீன கருவியின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள ஸ்டென்ட் பாதுகாப்பாக உள்ளதா என்பதையும் இக்கருவி மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

தனியாா் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இக்கருவி மூலம் அடுத்த ஒரு மாத காலத்துக்கு பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை இருதயத் துறை தலைவா் ஜெ.நம்பிராஜன் கூறியதாவது:

ரத்த நாளங்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால்தான் மாரடைப்பு ஏற்படுவதாக பொதுவான கருத்து உள்ளது. ஆனால் ரத்த கட்டிகள் உள்பட பல்வேறு காரணங்களாலும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பினை கருவி மூலம் துல்லியமாக கண்டறியலாம்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதயத் துறையில் ா்ஸ்ரீற் கருவி வாங்குவதற்கு ஜைகா திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மருத்துவமனையில் இக்கருவி பொருத்தப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஒரு மாதத்துக்கு சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

இக்கருவியின் பயன்பாடு குறித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், இருதயத் துறை நிபுணா்கள் மூலம் காணொலி காட்சி வழியாக முதுநிலை மாணவா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.