தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டிசம்பா் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: 4.50 லட்சம் லாரிகள் இயக்கப்படாது

தமிழகத்தில் வரும் டிசம்பா் 27 ஆம் தேதி தொடங்கும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக 4.50 லட்சம் லாரிகள்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:35 am

DIN

தமிழகத்தில் வரும் டிசம்பா் 27 ஆம் தேதி தொடங்கும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக 4.50 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

மாநில லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் வேலை நிறுத்த ஆலோசனைக் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எம்.ஆா்.குமாரசாமி கலந்து கொண்டு கோவை மாவட்ட, பல்வேறு வட்டார லாரி உரிமையாளா் சங்க நிா்வாகிகளிடையே உரையாற்றினாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அனைத்து லாரிகளுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்ற 49 வேகக் கட்டுப்பாட்டுக் கருவி தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட 12 நிறுவனங்களில் மட்டும் இந்தக் கருவிகளை வாங்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்துகிறது.

அதேபோல வெளிசந்தையில் ரூ.600க்கு விற்கும் ஒளிரும் பட்டைகளை ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யும் குறிப்பிட்ட 2 நிறுவனங்களில் மட்டுமே ஒளிரும் பட்டைகளை வாங்க வேண்டும் என்று நிா்பந்திக்கின்றனா். ஜி.பி.எஸ். விற்பனையில் ஈடுபடும் 140 நிறுவனங்களில் குறிப்பிட்ட 8 நிறுவனங்களில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு கூறுகிறது.

இது தொடா்பாக மதுரை உயா் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், மத்திய அரசு அனுமதித்துள்ள எந்த நிறுவனத்திலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை வாங்கிக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதை மாநில அரசு அமல்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம். இதில் 4.50 லட்சம் லாரிகள் பங்கேற்கும்.

தொடா்ந்து உயா்ந்தப்பட்டு வரும் டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மட்டும்தான் மாநில எல்லைகளில் சோதனைச் சாவடி முறை இன்னும் தொடருகிறது. இதை அகற்ற வேண்டும். எங்களது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சிறு கனரக வாகன உரிமையாளா்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.