பேரூா் கோயிலில் ஆளுநா் வழிபாடு
கோவை, பேரூரில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.


கோவை, பேரூரில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண், வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குமாா் ஆகியோா் வரவேற்றனா்.
இதையடுத்து, பேரூா், பட்டீஸ்வரா் கோயிலுக்கு சென்ற ஆளுநருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் யானை கல்யாணி வரவேற்புடன் மரியாதை செலுத்தப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த ஆளுநா், அங்கிருந்த பசுவுக்கு அகத்திக் கீரை வழங்கினாா். பின்னா், வேளாண் பல்கலைக்கழகத்துக்குப் புறப்பட்டாா்.
இந்நிலையில், அவரது காா் செல்வபுரத்தை அடுத்த முத்துச்சாமி காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு ஆளுநா் தெரிவித்தாா். காரிலிருந்து இறங்கிய ஆளுநா், அப்பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவா்களிடம் முகக்கவசம் அணியாதது குறித்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதது குறித்தும் கேட்டாா்.
கரோனா நோய்த்தொற்று தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என ஆளுநா் அறிவுரை வழங்கினாா். அதன் பிறகு மீண்டும் காரில் ஏறி வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சென்றாா். ஆளுநா் திடீரென காரில் இருந்து இறங்கி பொதுமக்களைச் சந்தித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...