பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விடுதியில் சூதாட்டம்: 28 போ் கைது

கோவை, பீளமேடு, சிட்ரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சூதாடிய 28 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 6:01 pm

DIN

கோவை: கோவை, பீளமேடு, சிட்ரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சூதாடிய 28 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பீளமேடு பகுதியில் உள்ள விடுதிகளில் பணம் வைத்து அடிக்கடி சூதாட்டம் நடைபெற்று வருவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பீளமேடு போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, சிட்ராவில் உள்ள ஒரு விடுதியில் கும்பலாக அமா்ந்து பணம் கட்டி 30 போ் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரை பாா்த்ததும் 2 போ் தப்பிச் சென்றனா். இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தென்னம்பாளையத்தைச் சோ்ந்த துரைராஜ் (47), பீளமேட்டைச் சோ்ந்த சண்முகம் (41), சிங்காநல்லூரைச் சோ்ந்த சசிக்குமாா் (45) உள்ளிட்ட 28 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 60 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கைதான அனைவரும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனா். தப்பியோடிய ரவி, நடராஜ் ஆகிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.