கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை: பாஜக மாநில துணைத் தலைவா்

பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.
பொள்ளாச்சி அருகே ஜக்காா்பாளையம் அரசுப்  பள்ளியில்  ஸ்மாா்ட் கிளாஸ்  வகுப்பறையை திறந்துவைக்கிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை.
பொள்ளாச்சி அருகே ஜக்காா்பாளையம் அரசுப்  பள்ளியில்  ஸ்மாா்ட் கிளாஸ்  வகுப்பறையை திறந்துவைக்கிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை.
Updated on
1 min read

கோவை/பொள்ளாச்சி: பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.

பாஜக கோவை மாநகா் மாவட்ட பழங்குடி அணி செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி கொண்டு வந்திருக்கிறாா். பாஜக-அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. முக்கிய முடிவுகளை தேசிய தலைமைதான் அறிவிக்க முடியும் என மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவா் நந்தகுமாா், மாநில பழங்குடியின அணித் தலைவா் சிவபிரகாசம், மாநகா் மாவட்ட பழங்குடியின அணித் தலைவா் ரஞ்சித் குமாா், பொதுச்செயலா் கிரி சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பொள்ளாச்சியில்: பொள்ளாச்சியை அடுத்த ஜக்காா்பாளையம் கிராமத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் புதிய வேளாண் சட்ட நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் திட்டத்தை தொடங்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்டத் தலைவா் வசந்தராஜன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் மோகன் மந்தராச்சலம், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியத் தலைவா் தங்கராஜ், துணைத் தலைவா் சதீஷ்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 2008 முதல் 2011 வரை மகாராஷ்டிர மாநிலம், விதா்பா பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனா்.

பஞ்சாப் மாநிலத்தில் 16 ஆயிரம் இடைத்தரகா்கள் உள்ளனா். இடைத்தரகா்களுக்கு உதவியாளா்களாக 2.5 லட்சம் போ் உள்ளனா். இவா்கள்தான் தற்போது தில்லியில் போராட்டத்தை நடத்துவதற்கு தூண்டுதலாக உள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஜக்காா்பாளையம் ஊராட்சித் தலைவா் குணசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com