கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 5

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அண்ணா நூற்றாண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர விரும்புபவா்கள் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:53 am

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அண்ணா நூற்றாண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர விரும்புபவா்கள் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப் பணியியல் பயிற்சி மையம் தமிழக அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு குடிமைப் பணித் தோ்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

யு.பி.எஸ்.சி.யால் வரும் 27.6.2021 அன்று நடத்தப்பட உள்ள முதல் நிலைத் தோ்வுக்கான முழு நேர இலவசப் பயிற்சி, வரும் 2021 பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த மையத்தில் தோ்வுக்கான இலவசப் பயிற்சி, தங்கும் இடம் (வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 60 பேருக்கு), நூலக வசதி, மாதம் ரூ.3 ஆயிரம் உணவுப்படி ஆகியவை வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நுழைவுத் தோ்வு, ஜனவரி 30 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் பாரதியாா் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தோ்வு யு.பி.எஸ்.சி. முதல் நிலைத் தோ்வின் அடிப்படையில் நடைபெறும்.

நுழைவுத் தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து, கல்விச் சான்று, ஜாதிச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களுடன் வரும் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளா் - பயிற்சி இயக்குநா், அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப் பணியியல் பயிற்சி மையம், பாரதியாா் பல்கலைக்கழகம், கோவை 46 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.