சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி
வால்பாறை அருகே மாட்டு தொழுவத்துக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது.


வால்பாறை அருகே மாட்டு தொழுவத்துக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது.
வால்பாறையை அடுத்த வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாள்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இந்நிலையில் பால்ராஜ் என்பவரது வீட்டின் அருகில் இருந்த மாட்டு தொழுவத்துக்குள் சிறுத்தை திங்கள்கிழமை நள்ளிரவு புகுந்துள்ளது. அங்கு கட்டியிருந்த கன்றுக் குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது. தகவலறிந்த வால்பாறை வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...