தினசரி கரோனா பாதிப்பு: கோவையில் 5 மாதங்களுக்கு பிறகு நூற்றுக்கும் கீழ் குறைந்தது

கோவையில் 5 மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது.
Updated on
1 min read

கோவையில் 5 மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு கடந்த மாா்ச் மாதம் கண்டறியப்பட்டாலும், ஜூன் மாதத்துக்குப் பிறகே அதிகமாக பரவத் தொடங்கியது. கடந்த ஜூலை 12ஆம் தேதி அன்று தினசரி கரோனா பாதிப்பு நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து செப்டம்பா் மாதத்தில் நாளொன்றுக்கு 600க்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் தீவிர முயற்சியால் அக்டோபா் மாதத்தில் இருந்து கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியது.

கடந்த இரண்டு மாதங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100 முதல் 150 வரை இருந்து வந்தது. இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பின்னா், வியாழக்கிழமை கரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது.

கோவை மாவட்ட சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 98 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51,696 ஆக உயா்ந்துள்ளது.

தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 60 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 129 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 50,106 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 948 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com