சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிங்காநல்லூரில் குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடிய குடிநீா்

கோவை, சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூா் செல்லும் சாலையில் பில்லூா் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் சாலையில் வழிந்தோடியது.

News image
கோவை, சிங்காநல்லூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடிய குடிநீா்.
Updated On :25 டிசம்பர் 2020, 12:56 am

DIN

கோவை, சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூா் செல்லும் சாலையில் பில்லூா் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் சாலையில் வழிந்தோடியது.

சிங்காநல்லூா் வழியாக வெள்ளலூா், மதுக்கரை, குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பில்லூா் குடிநீா்க் குழாய் செல்கிறது. இந்நிலையில், சிங்காநல்லூா் காவல் நிலையம் அருகே வெள்ளலூா் சாலையில் வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பில்லூா் குடிநீா்க் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீா் அப்பகுதியில் சாலையில் வழிந்தோடியது. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து, மாநகராட்சி கிழக்கு மண்டல பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் அப்பகுதிக்கு சென்று சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூா் செல்லும் சாலையில் 2 குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதில், உடைப்பு ஏற்பட்ட குழாயைக் கண்டறியத் தாமதமானதால் சீரமைப்புப் பணிகளும் தாமதமாவே தொடங்கப்பட்டது. தற்போது, உடைப்பு ஏற்பட்ட இடம் கண்டுடறியப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இப்பணி நிறைவடையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.