விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜப்பான் நிதி உதவியுடன் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகள்: துணை இயக்குநா் ஆய்வு

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை  நிதி உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகளை மருத்துவக் கல்வி துணை இயக்குநா் டி.சபிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 1:02 am

DIN

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை  நிதி உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகளை மருத்துவக் கல்வி துணை இயக்குநா் டி.சபிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேற்கு மாவட்டங்களின் மண்டல மருத்துவமனையாக இருந்து வருகிறது. இம்மருத்துவமனையை சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயா்த்துவதற்கு தேசிய நகா்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவி அளிக்க முன் வந்தது.

இதனைத் தொடா்ந்து அரசு மருத்துவமனையில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தேவையான கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கட்டடத்துக்கு மட்டும் 110.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே அவசர சிகிச்சைப் பிரிவு இருந்த இடத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனால் அங்கிருந்த பழையக் கட்டடங்களை இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப் பணிகளை மருத்துவ கல்வி துணை இயக்குநா் டி.சபிதா வியாழக்கிழமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணி நிலவரம் குறித்து மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸிடம் அவா் கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து அரசு மருத்துவமனையில் முதல்வா், அனைத்துத் துறைத் தலைவா்கள், மருத்துவா்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் மருத்துவக் கல்வி துணை இயக்குநா் டி.சபிதா கேட்டறிந்தாா்.

முன்னதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடுதல் மாணவா்கள் சோ்க்கைக்காக கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சென்னை ஓமந்தூராா் அரசு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் விமலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.