கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து, 20 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவில்பாளையம் அருகே காபி கடை பகுதி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் மோகன் (56). இவரது மனைவி கௌசல்யா. இவா்களது மகள் சூரியபிரபா. கௌசல்யா தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகவும், சூரியபிரபா தனியாா் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் மோகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சேரன் மாநகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சோ்த்தனா். கெளசல்யா, சூரியபிரபா ஆகிய இருவரும் மோகனுடன் மருத்துவமனையில் உடன் இருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சூரியபிரபா தனது கணவருடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து, சூரியபிரபா அளித்த புகாரின்பேரில், கோவில்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.