வாகனங்கள் நிறுத்த இடமின்றி சுற்றுலாப் பயணிகள் தவிப்பு
வால்பாறையில் வாகனங்கள் நிறுத்த இடமின்றி சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனா்.


வால்பாறை: வால்பாறையில் வாகனங்கள் நிறுத்த இடமின்றி சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனா்.
வால்பாறை டவுன் பகுதி மிகவும் நெருக்கமான பகுதியாகும். தபால் நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை ஒரே சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
குறிப்பாக விடுமுறை நாள்களில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் காணப்படும். அந்த நேரங்களில் வால்பாறையில் எந்த ஒரு பகுதியிலும் வாகனங்கள் நிறுத்த வசதி இல்லாததால் சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே வால்பாறை நகராட்சி மூலம் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...