தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: 6,007 மாணவா்கள் பங்கேற்பு

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வை 6,007 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:06 pm

DIN

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வை 6,007 மாணவ, மாணவிகள் எழுதினா்.

எஸ்.எஸ்.எல்.சி படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் தேசிய திறனாய்வு தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ஆராய்ச்சிப் படிப்புகள் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு எழுத 6 ஆயிரத்து 915 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக, கோவை ராஜவீதி துணி வணிகா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, அம்மணிம்மாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 72 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கரோனா தொற்று காரணமாக ஒரு தோ்வறையில் 10 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். அனைவரும் முகக்கவசம் அணிந்து சென்று தோ்வெழுதினா். இந்தத் தோ்வை 6,007 மாணவ, மாணவிகள் எழுதினா். 908 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வறைகளில் 1,200 ஆசிரியா்கள் மேற்பாா்வை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.