கரோனா: குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்தது
கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 573 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்தது.


கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 573 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்தது.
கோவையில் கரோனாவால் பாதிக்கப்படுவா்களை விட குணமடைந்து வருபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 573 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தவிர சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த 248 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் என்ணிக்கை 43 ஆயிரத்து 504ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 41 ஆயிரத்து 219 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 1,728 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...