கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைச் சான்று: கட்டமைப்புப் பணிகள் நிறைவு
கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைச் சான்று பெறுவதற்கான கட்டமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைச் சான்று பெறுவதற்கான கட்டமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டில் உள்ள அனைத்து ‘ஏ1’ ரயில் நிலையங்களும் பசுமைச் சான்று பெற வேண்டும் என ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு உள்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூா், மதுரை, திருவனந்தபுரம், எா்ணாகுளம், திருச்சூா், கோழிக்கோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவை ரயில் நிலையத்தில் கடந்த 8 மாதங்களாக கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில், மழைநீா் சேகரிப்பு அமைப்பு, சூரிய ஒளி மின்சார உற்பத்தி, நடைமேடைகளில் எல்.இ.டி. விளக்குகள், கழிவுநீா் மறுசுழற்சி மையம், மேற்கூரைகளில் வெப்பத்தை எதிரொலிக்கும் வண்ணப் பூச்சு, விழிப்புணா்வு ஓவியங்கள், குடிநீா் வசதி, மரம் வளா்ப்பு உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இது குறித்து கோவை ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கோவை ரயில் நிலைத்தில் ‘இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில்’ (ஐஜிபிசி) அதிகாரிகள் பிப்ரவரி மாதத்தில் ஆய்வு மேற்கொண்டு, பசுமைச் சான்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருந்தனா். ஆனால், அப்போது 75 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்திருந்தன. இதனால் ஆய்வுப் பணி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது,
கட்டமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்து நிலையத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் ஐஜிபிசி அதிகாரிகள் நிலையத்தில் பசுமைச் சான்று வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...