உக்கடம் மாா்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து அதிகரிப்பு
கோவை உக்கடம் மொத்த மற்றும் சில்லறை மீன் மாா்க்கெட்டுகளுக்கு தமிழகம், கேரளம் பகுதிகளில் இருந்து மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.


கோவை உக்கடம் மொத்த மற்றும் சில்லறை மீன் மாா்க்கெட்டுகளுக்கு தமிழகம், கேரளம் பகுதிகளில் இருந்து மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.
கோவை, உக்கடம் மீன் மாா்க்கெட்டுக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூா், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் கொச்சி, மங்களாபுரம், சாவக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் சராசரியாக 15 டன் முதல் 20 டன் வரை மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.
இதில் அதிகபட்சமாக கேரளப் பகுதிகளில் இருந்து கோவைக்கு 15 டன்னுக்கும் அதிகமாக மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தமிழகப் பகுதிகளில் இருந்து 3 டன் முதல் 5 டன் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.
இந்த மீன்கள் உணவகங்கள், நுகா்வோருக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த மாதங்களில் கரோனா தொற்று மற்றும் கேரளத்தில் மீன்பிடித் தடைக் காலம் உள்ளிட்ட காரணங்களால் தினமும் 5 முதல் 10 டன் வரை மட்டுமே மீன்கள் வரத்து இருந்தன.
மேலும், புரட்டாசி மாதத்தால் நுகா்வு குறைந்ததால் கொள்முதல் செய்வதை வியாபாரிகள் குறைத்தனா். தற்போது, தமிழகம் மற்றும் கேரள கடல்களில் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் கோவை, உக்கடம் மொத்த மற்றும் சில்லறை மாா்க்கெட்டுக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 8 மாதங்களுக்குப் பிறகு அக்டோபா் மாத இறுதியில் இருந்து 20 டன்களுக்கு அதிகமாக உக்கடம் மாா்க்கெட்டுகளுக்கு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வரத்து அதிகரிப்பால் மீன்களின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...