காவலா் குடியிருப்பில் மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
காவலா் குடியிருப்பில் மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


காவலா் குடியிருப்பில் மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். மாநகர காவல் துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தாயாா் கனகம் (75). இவா் பி.ஆா்.எஸ். மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கே வந்த இளைஞா் ஒருவா் கனகத்திடமிருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றாா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு காவலா் குடியிருப்புப் பகுதியில் பெண் ஒருவரிடம் நகைப் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...