தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழ்நாடு தினத்தை ஒட்டி கொடியேற்றிய நாம் தமிழா் கட்சியினா் மீது வழக்கு

கோவையில் தமிழ்நாடு தினத்தை ஒட்டி கொடி ஏற்றிய நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:29 pm

DIN

கோவையில் தமிழ்நாடு தினத்தை ஒட்டி கொடி ஏற்றிய நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, பி.என்.புதூரில் நாம் தமிழா் கட்சியின் வடக்குத் தொகுதி சாா்பில் தமிழ்நாடு தினத்தை ஒட்டி தனிக் கொடி தயாரித்து ஏற்றினா். ஆனால், இதுபோன்ற கொண்டாட்டங்களைத் தவிா்க்குமாறு போலீஸாா் அறிவுறுத்தியிருந்தனா்.

இது குறித்து தகவலறிந்த வடவள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கொடியை அகற்றி கட்சி நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல சாய்பாபா காலனி பகுதியிலும் தடை மீறி கொடியேற்றிய நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.