பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
பாஜக தலைவர் முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.


பாஜக தலைவர் முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
மாநில பாஜக தலைவர் முருகன் திருத்தணி முருகன் கோயிலிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயில் வரை வெள்ளிக்கிழமை வெற்றிவேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவித்திருந்தார். கரோனா தொற்று காரணமாக யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை திருத்தணி வந்த பாஜக தலைவர் முருகன் மலைக்கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுவிட்டு வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்கி வைத்தார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்பட பலர் இருந்தனர்.
இதையடுத்து, பாஜக தலைவர் முருகன் உட்பட முக்கியத்தலைவர் என 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாஜக தலைவர் முருகன் உட்பட முக்கியத்தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி சார்-ஆட்சியல் அலுவலகம் முன்பு 600க்கும் அதிகமான பாஜகவினர் கூடினர். வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை, முருகன் உட்பட முக்கிய பாஜக தலைவர் கைது செய்தது போன்றவற்றை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திமுக, கருப்பர்கூட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவற்றை கண்டித்து கோஷமும் எழுப்பினர்.
இதனால், பேருந்துநிலையம், சார்-ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன், மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்தராச்சலம், விவசாய அணி நிர்வாகி பாபாரமேஷ், நிர்வாகிகள் ஆனந்த், தனபாலகிருஷ்ணன் உட்பட 500க்கும் அதிகமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...